2441.

     ஆர்க்கு மரிதா மருந்து - தானே
          ஆதி யநா தியு மான மருந்து
     சேர்க்கும் புதிதா மருந்து - தன்னைத்
          தேடுவோர் தங்களை நாடு மருந்து. நல்ல

உரை:

     தன்னை நினைப்பவர் எங்கே யிருப்பினும் தேடிப் புகுந்து அருள்வது சிவபெருமான் இயல்பாவது பற்றித் “தன்னைத் தேடுவோர் தங்களை நாடும் மருந்து” என்று கூறுகிறார். “எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு, இங்கே யென்றருள் புரியும் எம்பெருமான்” (பிரம) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க.

     (11)