2442. புண்ணியர்க் கான மருந்து - பரி
பூரண மாகப் பொருந்து மருந்து
எண்ணிய வின்ப மருந்து - எம
தெண்ணமெ லாமுடித் திட்ட மருந்து. நல்ல
உரை: யாதாலும் குறைவிலா நிறைவுடையனாதலால் “பரிபூரணமாகப் பொருந்தும் மருந்து” என்று கூறுகின்றார். “குறைவிலா நிறைவே கோதிலா அமுதே” (கோயிற்) என்பது திருவாசகம். அன்பராயினார் எண்ணம் இனிது நிறைவுறச் செய்தல் தோன்ற, “எமது எண்ணம் எல்லாம் முடித்திட்ட மருந்து” எனப் புகல்கின்றார். (12)
|