2444. பார்க்கப் பசிபோ மருந்து - தன்னைப்
பாராத வர்களைச் சேரா மருந்து
கூர்க்கத் தெரிந்த மருந்து - அநு
கூல மருந்தென்று கொண்ட மருந்து. நல்ல
உரை: கூர்த்தல் - நுணுகி நோக்குதல். “நுண்ணறிவால் வழிபாடு செய்யும் காலுடை யான்” (ஞானசம். கீழைத்திருக்காட்டு) என்று பெரியோர் தெரிவிக்கின்றார்கள். அனுகூலம் - துணைப்பொருள். (14)
|