2445.

     கோதிலா தோங்கு மருந்து - அன்பர்
          கொள்ளைகொண் டுண்ணக் குலாவு மருந்து
     மாதொரு பாக மருந்து - என்னை
          வாழ்வித்த என்கண் மணியா மருந்து.நல்ல

உரை:

     கோது - குற்றம். கொள்ளை கொண்டுண்ணல் - விருப்பம் போல வாரிக் கொண்டுண்பது. “ஆசை தீரக் கொடுப்போர் - அலங்கல் விடை மேல் வருவார்” (கடவூ. மயா.) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க.

     (15)