2448. செல்வந் தழைக்கு மருந்து - என்றுந்
தீரா வினையெலாந் தீர்த்த மருந்து
நல்வந் தனைகொள் மருந்து - பர
நாதாந்த வீட்டினுள் நண்ணு மருந்து. நல்ல
உரை: நல்வந்தனை - நல்ல தூய வழிபாடு. பரநாதாந்த வீடு - பரமாகிய நாத தத்துவத்துக்கு அப்பாற்பட்ட இன்ப நிலையம். நாதாந்த பரவீடு என இயைத்துச் சுத்தமாயையின் உச்சிக் கண்ணதாகிய சிவதத்துவத்துக்கு அப்பால் நிலவும் மேலான இன்ப வீடு என்றலும் ஒன்று. சிவதத்துவத்தை, நாததத்துவம் என்பர். (18)
|