2449.

     வாய்பிடி யாத மருந்து - மத
          வாதமும் பித்தமும் மாய்க்கு மருந்து
     நோய்பொடி யாக்கு மருந்து - அன்பர்
          நோக்கிய நோக்கினுள் நோக்கு மருந்து. நல்ல

உரை:

     வாய் பிடியாத மருந்து - வாய்க்குட் பெய்து உண்ணப்படும் உலகியல் மருந்து போல்வதன்று. மதவாதம் - செருக்குற்றுச் செய்யும் சமய வாதம். பித்தம் - பிற சமய வுண்மைகளையும் சமரசமாகக் காண்பதில்லாத சமய வெறித்தன்மை. அன்பர் நோக்கிய நோக்கினுள்நோக்கு மருந்து - மெய்யன்பர்கள் எதிர்நோக்கும் திருவருள்நாட்டத்திற் கலந்து காட்டியும், கண்டும் உபகரிக்கும் சிவம்.

     (19)