2451. என்றுங் கெடாத மருந்து - வரும்
எல்லாப் பிணிக்கு மிதுவே மருந்து
துன்னுஞ் சிவோக மருந்து - நம்மைச்
சூழ்ந்திரு மைக்குந் துணையா மருந்து. நல்ல
உரை: பிணி - நோய். சிவோகம்; “அகம் சிவம் அஸ்மின” என இயைந்து நான் சிவமாவேன் என்று பொருள்பட வரும் பாவனா மந்திரம். இதனைச் சிவோகம் பாவனை என்பதும் உண்டு. இருமை - இம்மை மறுமை என்ற இரண்டு வாழ்வினும் துணை செய்யும் மருந்து என்றற்கு “நம்மைச் சூழ்ந்து இருமைக்கும் துணையாம் மருந்து” என்று பாடுகின்றார். (21)
|