2452.

     கண்ணொளி காட்டு மருந்து - அம்மை
          கண்டு கலந்து களிக்கு மருந்து
     விண்ணொளி யாக்கு மருந்து - பர
          வீடு தருங்கங்கை வேணி மருந்து. நல்ல

உரை:

     கண்ணொளி காட்டும் மருந்து - கண்ணுக்கு இம்மை வாழ்வுக்குரிய தூல வொளியையும் அம்மைக்குரிய சூக்கும அருளொளியையும் தரும் ஞான மருந்து. அம்மை - உமாதேவி. விண்ணொளி - வானத்தில் விளங்கும் ஞாயிறு திங்கள் முதலிய ஒளிப்பொருள்கள். பரவீடு - மேலான முத்தி வீடு. கங்கை வேணி - கங்கையாறு தங்கும் சடை.

     (22)