2456.

     மறந்தா லொளிக்கு மருந்து - தன்னை
          மறவா தவருள் வழங்கு மருந்து
     இறந்தா லெழுப்த மருந்து - எனக்
          கென்றுந் துணையா யிருக்கும் மருந்து. நல்ல

உரை:

     சிவனை மறந்தவர்க்கு உய்தியில்லை என்பதுபற்றி, “மறந்தால் ஒளிக்கும் மருந்து” எனக் கூறுகிறார். இறந்தார் - செத்தவர்; நன்னெறி வரம்பு பிறழ்ந்தவர் என்றுமாம்.

     (26)