2457.

     கரும்பிலினிக்கு மருந்து - கடுங்
          கண்டகர்க் கெல்லாம் கசக்கு மருந்து
     இரும்பைக் குழைக்கு மருந்து -பே
          ரின்ப வெள்ளத்தே யிழுக்கு மருந்து. நல்ல

உரை:

     கண்டகர் - கொடியவர். குழைத்தல் - உருக்குதல். “இரும்பு தருமனத்தேனை ஈர்த்தீர்த்து என்னென்புருக்கிக் கரும்பு தருசுவையெனக்குக் காட்டினையுன் கழலிணைகள்” (ஏசறவு) என வரும் திருவாசகத்தை, “இரும்பைக் குழைக்கும் மருந்து, பேரின்ப வெள்ளத்தே இழுக்கும் மருந்து” என்பது நினைப்பிப்பது காண்க.

     (27)