2566. பூசைசெய் வாருளம் ஆசைசெய் வார்தில்லை
ஈசர் எமதுநட ராஜற்கு - மங்களம்
உரை: நாளும் பூசனை புரியும் மெய்யன்பர் மனத்தின்கண் அன்புடன் எழுந்தருளும் ஈசனாகிய நடராசப் பெருமானுக்கு மங்கள முண்டாகுக. எ.று.
பூசை - பூசனை; சிறப்பொடு பூசனை செல்லாது” (குறள்) எனச் சான்றோர் வழங்குவது காண்க. பூவும் நீரும் கொண்டு வழிபடுவது பூசையாதலால், இது தமிழ்ச் சொல் வென்பர் சொல்லாராய்ச்சியாளர்.
|