2567.

     பூமி புகழ்குரு சாமி தனைஈன்ற
     வாமி எனஞ்சிவ காமிக்கு - மங்களம்.

உரை:

      பூவுலகில் உள்ளவர் புகழ்ந்து பரவும் குருபரனாகிய முருகப் பெருமானைப் பெற்ற அழகியாகிய சிவகாமி யம்மைக்கு மங்கள முண்டாகுக. எ.று.

          பூமி - பூமியிலுள்ள மக்களைக் குறித்தலால் ஆகு பெயர். குரு ஞானாசிரியன். சாமி -முருகன். குருசாமி, குருவாகிய சாமி என விரியும். வாமம், அழகு. அழகுடையவனை வாமி என்கிறார். தில்லையில் அம்பிகைக்குச் சிவகாமி என்பது பெயர்.