2568.

     புங்கமி குஞ்செல்வந் துங்கமு றத்தரும்
     செங்க மலத்திரு மங்கைக்கு - மங்களம்.

உரை:

      உயர்வு நல்கும் செல்வங்களை மிகுதியாக எய்த, அருளும் செந்தாமரையில் மேவும் திருமகளுக்கு மங்கள முண்டாகுக. எ.று.

          புங்கம், உயர்வு. செல்வ முடையார்க்கு யாவரும் சிறப்புச் செய்தலால், “புங்கமிகும் செல்வம்” என்று புகல்கின்றார். துங்கம்-ஈண்டு மிகுதிப் பொருளில் வந்தது. திருமங்கை -இலக்குமி; திருமாலுக்கு அருட் சத்தியாயவள்.