2570.

     புண்ணிய ராகிய கண்ணிய ராய்த்தவம்
     பண்ணிய பத்தர்க்கு முத்தர்க்கு - மங்களம்.

உரை:

      நல்வினைகளைச் செய்தோராய் மேன்மை பெற்றவராய்த் தவம் புரியும் பத்திமான்களுக்கும் முத்திப் பேற்றுக் கமைந்த ஞானவான்களுக்கும் மங்கள முண்டாகுக. எ.று.

          புண்ணியர் - நல்வினைகளாகிய புண்ணியங்களைச் செய்பவர். கண்ணியம், மேன்மை. புண்ணியமும் கண்ணியமு முடையவர் தவம் புரியும் தக்கோராதலின், தவம் பண்ணிய “பத்தர்” எனவும், தவத்தால் ஞானப் பேறு எய்துதலால் “முத்தர்” எனவும் இயம்புகின்றார்.