2840.

     கீடமனை யேனெனையும் பாங்கிமா ரே - அடிக்
     கேயடிமை கொண்டாரன்று பாங்கிமா ரே.

உரை:

     மலம் கலந்த கீழ்மக ளென்று கருதாமல் எனது நட்பையும் அந்நாளில் ஏற்றுக் கொண்டார்; புழுப் போன்ற என்னையும் தன் திருவடிக் கடிமையாக அந்நாளிற் கொண்டார். எ.று.

     மலப் பிணிப்பால் கீழ்மை நிலையுற்ற என்னையும் அருளி யான் தன் திருவடிக் கன்பு செய்யக் கருணை புரிந்தார். கீடம் - புழு. வெயில் வெம்மைக் காற்றாது கெடும் புழுப் போல வினை வெம்மைக் காற்றாது வருத்துவேன் என்பாளாய், “கீட மனையேன்” என்றும், உலகுடல் கருவி கரணங்களைப் படைத்தளித்த அந்நாளே என்னைத் தன் திருவடிமையாக்கினார் என்பது புலப்பட, “அடிக்கே யடிமை கொண்டார் அன்று” என்றும் கூறுகிறாள்.

     (20,21)