2849.

     சச்சிதா னந் தக்கடலில் வெண்ணிலா வே - நானுத்
     தாழ்ந்துவிழ வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.

உரை:

     சத்தும் சித்தும் ஆனந்தமுமாகிய சிவபோகக் கடலில் மூழ்கி யின்புற வேண்டுகிறேன். எ.று.

     சத்து - என்றும் உள்ளது; சித்து - ஞானம்; ஆனந்தக் கடல் - இன்பக் கடல். அது சிவபோகப் பெருங்கடல் என்க.

     இதனால், நாதாந்தம் சச்சிதானந்தம் எனத் தெரிவித்தவாறாம்.

     (3)