2850. இராப்பகலில் லாவிடத்தே வெண்ணிலா வே - நானும்
இருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலா வே.
உரை: வண்ணிலாவே, இரவு பகல் என்ற காலப் பாகுபாடு இல்லாத பரவெளியை அடைந்து அங்கேயே இருக்க விரும்புகிறேன். எ.று.
மாயா மண்டலத் தத்துவக் கூறுகளி லொன்றான கால தத்துவம், மாயா தீதமாகிய பரசிவ வெளியில் இல்லையாகலின், அதனை “இராப்பகல் இல்லா விடம்” என்று கூறுகின்றாள்.
இதனாற் சச்சிதானந்தக் கடலாவது இராப்பகல் இல்லாத இடம் எனத் தெரிவித்தவாறாம். (4)
|