2863. ஐந்தலைப்பாம் பாட்டுகின்றார் வெண்ணிலா வே - அவர்
அம்பலத்தில் நின்றதென்ன வெண்ணிலா வே.
உரை: வெண்ணிலவே, சிவபெருமான் ஐந்து தலைகளையுடைய பாம்பை யாட்டுகின்றார் என்று கூறுவர்; அவர் அம்பலத்தில் நின்றருளுவதன் கருத்தென்ன? சொல்லுக. எ.று.
ஐந்தலைப் - பாம்பு, ஆயிரம் தலைப் பாம்பு என புராணங்கள் கூறுவது மரபு. ஐவகைப் புலன்றிவையும் ஐந்து தலையாகவும் அவற்றின் வழி நின்றுலவும் உயிரைப் பாம்பாகவும் நிறுத்தி, உயிர்களை ஆட்டி வைப்பது பற்றி, இறைவனை ஐந்தலைப்பாம்பை ஆட்டுபவ னென்றும் இதற்குக் கருத்துரைப்பர். அம்பலம் - சபை. (17)
|