2881. கடையவனேன் வைதகடுஞ் சொன்னினைக்குந் தோறும்
உடையவனே யென்னுடைய வுள்ள முருகுதடா.
உரை: என்னை ஆளாக வுடைய பெருமானே, கடைப்பட்டவனாகிய யான் உன்னை வைது பாடிய சொற்களை நினைக்கும்போதெல்லாம் எனது உள்ளம் உருகுகிறது, காண். எ.று.
கீழ்மக்கள் பேசும் போதெல்லாம் பிறரை வைது பேசுவதே இயல்பாக இருப்பது கொண்டு, “கடையவனேன் வைத கடுஞ்சொல்” எனவும், கடுமை பின்னர் நினைவிற் றோன்றி வருத்துதலால், “உள்ளம் உருகுதடா” எனவும் இசைக்கின்றார். (12)
|