2884.

     வெருவாம லையோ விளம்பியசொல் லெல்லாம்
     ஒருவா நினைக்கிலெனக் குள்ள முருகுதடா.

உரை:

     சிவபெருமானே, அச்சமில்லாமல் நான் பேசிய சொற்களை யெல்லாம் ஒன்றும் விடாமல் நினைத்தால் ஐயோ என் மனம் உருகுகிறது காண். எ.று.

     நெஞ்சில் அச்சமிருந்தால் ஒருவரை இகழ்ந்துரைக்க எண்ணமுண்டாகாது; நாவும் எழாது; ஆதலால் “வெருவாமல் விளம்பிய சொல்லெல்லாம்” என்று கூறுகிறார். ஒருவாமல் என்ற எதிர்மறை வினையெச்சம் ஈறு கெட்டது.

     (15)