2889.

     வெப்பில் கருணை விளக்கனையா யென்பிழையை
     ஒப்பி நினைக்கிலென குள்ள முருகுதடா.

உரை:

     தண்ணிய கருணையொளி செய்யும் விளக்குப் போன்றவனே, யான் செய்துள்ள குற்றங்களை மன மொத்து நினைக்கும்போது என் மனம் உருகுகிறது, காண். எ.று.

     வெம்மை யொளி செய்யும் விளக்குப் போலாது குளிர்ந்த ஞானவொளி நல்குவது பற்றி, இறைவனை, “வெப்பில் கருணை விளக்கனையாய்” என்கின்றார். வேறு வேறு நினைவுற் றலையும் மனம் ஒன்றி நினைப்பது ஒப்பி நினைத்தலாம்.

     (20)