2892. இத்தா ரணிக்குளெங்கு மில்லாத தீமைசெய்தேன்
அத்தா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
உரை: இவ்வுலகில் எவ்விடத்து இல்லாத தீங்கினைச் செய்துள்ளேன்; அத்தனே, அதனை நினைக்கும்போது என் பொறி புலனைந்தும் கலங்குகின்றன, காண் எ.று.
தாரணி - உலகு; மக்களுலகின் மேற்று. மக்களினத்தில் எத்தகைய தீயவரும் செய்திராத தீங்குகளை யான் செய்துள்ளேன் என்பாராய், “இத்தாரணிக்குள் எங்கும் இல்லாத தீமை செய்தேன்” என்று கூறுகின்றார். (23)
|