2894.

     இப்பாவி நெஞ்சா லிழுக்குரைத்தே னாங்கதனை
     அப்பா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.

உரை:

     பாவியாகிய என்னுடைய நெஞ்சினால் தவறான சொற்களைப் பேசினேன்; அதனை இவ்விடத்தே நினைப்பேனாயின், என் பொறி புலன்கள் நிலைகலங்குகின்றன, காண். எ.று.

     தவறான சொற்களை வழங்குதற்கு நெஞ்சின் தூண்டுதல் காரணமாதல் தோன்ற, “நெஞ்சினால்” என்றும், தவறு கூறும் செயலால் பாவியாதல் பற்றி, “பாவி நெஞ்சால்” என்றும் இயம்புகின்றார்.

     (25)