2895.

     எண்ணாக் கொடுமையெலா மெண்ணியுரைத் தேனதனை
     அண்ணா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.

உரை:

     யாரும் செய்யக் கருதாத கொடுமைகள் அனைத்தையும் யான் கருதிச் சொல்லியுள்ளேன்; அதனை இப்போது நினைத்தால், அண்ணலே, என் பொறி புலன்கள் நிலைகலங்குகின்றன. எ.று.

     எண்ணாக் கொடுமை - இதுகாறும் யாரும் எண்ணாத கொடுமை. நினைவின் வழியது செயலாதலின், “எண்ணி யுரைத்தேன்” என இயம்புகின்றார்.

     (26)