2896.

     வெம்மான் மனத்து வினையேன் புகன்றதெலாம்
     அம்மா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.

உரை:

     வெவிய மயக்குற்ற மனத்தினால் வினையேனாகிய யான் சொன்னதெல்லாம், இப்போது நினைத்தால், அம்மவோ, என்னுடைய பொறி புலனைந்தும் உருகுகின்றன, காண். எ.று.

     மனத்திற் படிந்த மயக்கத்தின் மிகுதி குறித்தற்கு, “வெம்மான் மனம்” எனவும், ஊழ்வினை சூழ்ந்திருப்பது விளங்க, “வினையேன்” எனவும் விளம்புகின்றார்.

     (27)