2902. ஈண்டவனேன் வன்சொல் இயம்பியதை யென்னுடைய
ஆண்டவனே யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
உரை: என்னை ஆண்டு கொண்ட பெருமானே, குற்றம் பலவும் நிறைந்தவனாகிய யான் இயம்பிய வன்சொற்களை நினைக்கும்போது என் பொறி புலனைந்தும் கலங்குகின்றன, காண். எ.று.
ஆண்டவன் - வேண்டுவன தந்து வாழச் செய்தவன்; இறைவன் எனினும் அமையும். ஈண்டு அவன் - குற்றங்கள் நிறைந்தவன். ஈண்டுதல் - நிறைதல். “இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர்” (குறள்) என்பது காண்க. செயப்படு பொருளாகிய குற்றம் வருவிக்கப்பட்டது. (33)
|