2905.

     கொதிக்கின்ற வன்மொழியாற் கூறியதை யையோ
     மதிக்கின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.

உரை:

     ஐயோ, கேட்டார் செவி சுடப் பேசிய பொல்லாச் சொற்களை நினைக்குந்தோறும் வாளால் அறுப்பது போல நினைவு என்னை வருத்துகிறது, காண்க. எ.று.

     செவியிற் கேட்ட மாத்திரமே நெஞ்சமும் உடம்பும் வெதும்பச் செய்வது பற்றி, “கொதிக்கின்ற வன்மொழி” என்று கூறுகின்றார். வன்மொழி - தீய சொற்கள். மதித்தல் - நினைத்தல்.

     (36)