2907. செய்தநன்றி யெண்ணாச் சிறியவனே னின்னருளை
வைத்தெண்ணுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
உரை: பொய் நிறைந்த மனத்தை யுடையவனாதலால், யான் உரைத்த கொடிய பொய்ச் சொற்களையெல்லாம் நெஞ்சில் நினைவுற்று எண்ணுந் தோறும் விளைவுகள் தோன்றி வாளால் அறுப்பது போலத் துன்புறுத்துகின்றன, காண். எ.று.
பொய்யை யுடைய மனம், பொய்த்த மனம் எனப்படுகிறது. மனம் அத்தன்மையுடைய தாயினமையின், கொடுஞ் சொற்களையே புகன்றேன் என வுரைக்கின்றார். கொடுஞ் சொல் - நேர்மையில்லாத சொல். (39)
|