2909.

     பொங்குகின்ற தீமை புகன்றதெலா மெண்ணியெண்ணி
     மங்குகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.

உரை:

     மேன் மேற் பெருகுகின்ற துன்பத்தைச் செய்யும் தீய சொற்களை முன்பு யான் பேசியதை இப்போது பலகாலும் நினைந்து நினைந்து அறிவு மழுங்கும்போது உள்ளால் வாளால் அறுப்புண்பது போல வருந்துகிறது, காண். எ.று.

     பொங்குதல் - மிகுதல். தீமை - தீது செய்யும் சொற்கள். சொல்லும் தமக்கும் கேட்கும் பிறர்க்கும் தூயரம் செய்தலின், அவற்றின் நினைவு அறிவயரச் செய்தல் பற்றி, “எண்ணி மங்குகின்ற தோறும்” எனக் கூறுகின்றார்.

     (40)