2914.

     விஞ்சகத்தா லந்தோ விளம்பியதை யெண்ணுதொறும்
     வஞ்சகத்தே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.

உரை:

     தருக்கினால் பலர் முன் பேசியதை நினையும் போதெல்லாம், அந்தோ, வஞ்சகனாகிய என் மனத்தை அப்பேச்சு வாளால் அறுப்பது போல் வருத்துகிறது, காண். எ.று.

     விஞ்சகம் - தருக்கு; செருக்கினால் உளதாகும் பெருமிதமுமாம். தருக்கினால் மனம் தடிப்புற்று அடாதன பேசுவிக்குமாதலால், “விஞ்சகத்தால் விளம்பியது” என்கின்றார். வஞ்சகம், வஞ்சனை, சூது முதலிய தீச்செயலை நினைக்கும் மனம்.

     (45)