2915. விளங்குகின்ற நெஞ்ச விளைவையெண் ணுந்தோறும்
மலங்குகின்றே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
உரை: நன்னெறியின் நீங்கியொழுகுகின்ற நெஞ்சினால் விளையக்கூடிய தீமைகளை நினைவு கூரும் போதெல்லாம், கலங்குகின்ற என் மனத்தை அந்நினைவு வாளாலறுப்பது போன்ற நோயைச் செய்கிறது, காண். எ.று.
விலங்குதல் - குறுக்கிடுதல்; ஈண்டு நெறியினின்றும் நீங்குதல், நெஞ்சம் நீங்குதலாவது, நெறி பிறழ்ந்த எண்ணங்களை மேற் கொள்ளுதல். மலங்குதல் - கலக்கமுறுதல். (46)
|