2917. கலிக்கின்ற வஞ்சகக் கருத்தைக் கருதி
வலிக்கின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
உரை: வஞ்சனையான எண்ணங்கள் மனத்தில் தழைத்தோங்குவதை யெண்ணி அவற்றின்கண் ஈர்த்துச் செல்கின்ற போதெல்லாம் என் உள்ளம் வாளால் அறுப்பது போன்ற துன்பத்தை எய்துகிறது, காண். எ.று.
கலித்தல் - தழைத்தல்; ஒன்று பலவாய் விரிதல். வலித்தல் - ஈர்த்தல். நினையா திருக்கினும் நினைக்கச் செய்வது பற்றி “வலிக்கின்ற தோறும்” என வுரைக்கின்றார். (48)
|