2918. நீட்டுகின்ற வஞ்ச நெடுஞ்சொலெலா நெஞ்சகத்தே
மாட்டுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
உரை: வஞ்சனையால் நீட்டிப் பேசுகின்ற நெடுமொழிகளை மனம் நினைந்து பேசுந்தோறும் உள்ளம் வாளால் அறுப்பது போன்ற துன்பம் அடைகின்றது, காண். எ.று.
நீட்டுதல் - நீளப் பேசுதல். நெடுமொழி - வஞ்சின முதலியன போன்ற தருக்கிப் பேசும் சொற்கள். (49)
|