2920.

     வெருவிக்கும் வஞ்ச வெறுஞ்சொலெலாம் நெஞ்சில்
     வருவிக்குந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.

உரை:

     கேட்போரை அச்சுறுத்தும் வஞ்சனையாகப் பேசிய வெறுஞ் சொற்களை மனதில் நினைவு கூரும் போதெல்லாம், அவை என், உள்ளத்தில் வாள் கொண்டறுப்பது போன்ற வேதனையைத் தருகின்றன, காண். எ.று.

     வெருவித்தல் - அஞ்சுவித்தல். வெறுஞ் சொல்-பயனில்லாத சொற்கள். வருவித்தல் - நினைவுக்குக் கொண்டு வருதல். வெறுஞ் சொற்களால் பிறரை அச்சமுறச் செய்தமை நினைந்து வருந்தியவாறாம்.

     (51)