2924. புன்மையினால் வன்சொற் புகன்றபுலைத் தன்மையெலாம்
நன்மையிலேன் எண்ணுதொறும் நாடி நடுங்குதடா.
உரை: நற்பண்பு இல்லாமையால் என்பால் உள்ள புன்மைக் குணத்தால் வன்சொற்களே மொழிந்து புலைத்தன்மை கொண்டதை எண்ணும்போது என் தேக நாடி யனைத்தும் துடிக்கின்றன, காண். எ.று.
நற்பண்பு இல்லாமையால் என்பால் புன்மைச் செயலும் புலைத்தன்மையும் உளவாயின; அதனால் யான் மொழிந்த வன்சொற்களை நினைக்கையில் உடம்பெல்லாம் நடுங்குகிறது என வுரைக்கின்றார். (55)
|