2925. ஊனெண்ணும் வஞ்ச வுளத்தா லுரைத்தவெலாம்
நானெண்ணுந் தோறுமென்ற னாடி நடுங்குதடா.
உரை: ஊனாலாகிய உடம்பை ஓம்புதலே பொருளாகக் கொண்ட வஞ்சம் நிறைந்த மனத்தினால் நான் பேசிய சொற்களை இப்போது நான் எண்ணும்போது என் நாடியனைத்தும் துடிக்கின்றன, காண். எ.று.
ஊன் எண்ணும் மனம் - ஊனுடம்பைப் பேணுதற்கே நினைக்கின்ற மனம்; ஊனுணவே விரும்பும் மனம் என்றுமாம். ஊனுடம்பு ஓம்புதலே நினைப்பது இழிவாகலின், அதனை மறைத் தொழுகுவது பற்றி, “வஞ்ச மனம்” என்கிறார் என்று கூறுவதும் பொருந்தும். (56)
|