2927.

     கோணநெடு நெஞ்சக் குரங்காற் குதித்தவெலாம்
     நாணமிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா.

உரை:

     கோணல் நினைவுகளையுடைய நெடிய மனமாகிய குரங்கினால் பொருள்களின்மேல் தாவித் தாவி ஆசை யுற்றதை; நாணமில்லாத யான் இப்போது நினைக்கின், என் தேக நாடிகள் யாவும் துடிக்கின்றன. காண். எ.று.

     கோணல் - வளைவு; நன்னெறியினின்றும் நீங்கி ஒழுகுதலுமாம் நெஞ்சத்துக்குப் பெரிய குரங்கை உவமம் கூறுதலால் “வஞ்ச நெடுங்குரங்கு” என்று கூறுகின்றார். கோணல் நினைவுகளை மறைத்தல் தோன்ற “வஞ்ச மனக்குரங்கு” என வுரைக்கின்றார். கோணிய சொல்லும் செயலும் காண்போரால் இழிக்கப்படுதலால், “நாணமிலேன்” என்று நவில்கின்றார்.

     (58)