2931. நாயனையே னெண்ணாம னலங்கியவன் சொல்லையெலாம்
தாயனையா யெண்ணுதொறும் தாது கலங்குதடா.
உரை: தாய் போன்ற பெருமானே, நாய் போன்ற யான் நின்னுடைய நலங்களைக் கருதாமல் சொல்லிய வன்சொற்களை நினைக்கும் போது என் உடம்பின் தாதுக்கள் அத்தனையும் நிலை கலங்குகின்றன. காண். எ.று.
எண்ணுதற்குரிய நலங்கள் என்பது வருவிக்கப்பட்டது. நலங்குதல் - மனம் நொந்து பேசுதல். (62)
|