2932.

     நிற்குருகா வஞ்ச நினைவால் நினைத்தவெலாஞ்
     சற்குருவே யெண்ணுதொறுந் தாது கலங்குதடா.

உரை:

     சற்குருவாகிய சிவனே, நின்னையே நினைந்து உருகுதல் இன்றி வஞ்சனை நினைவே கொண்டு எண்ணியவற்றை யெல்லாம் எண்ணியபோது என் தாது கலங்குகிறது, காண். எ.று.

     குருவாய் எழுந்தருளி உண்மை யுணர்வு தருபவனாதலின், “சற்குருவே” என்று கூறுகின்றார். சற்குரு, மெய்ம்மை யுருவாய குரு முதல்வன்.

     (63)