2936. வந்திப் பறியேன் வழங்கியவன் சொல்லையெலாம்
சிந்திக்கி லுள்ளே திடுக்கிட் டழுங்குதடா.
உரை: வணங்கி வழிபடுதலை யறியாமல் வாய் தவறிய வன்சொற்களை யெல்லாம் இப்போது நினைக்குமிடத்து மனம் திடுக்கிட்டு வருந்துகிறது, காண். எ.று.
வந்திப்பு - வந்தனை வழிபாடுகள். வழங்கிய வன்சொல் - தடையின்றிப் பேசுதல்; வாய்க்கு வந்தபடி பேசுதலாம். உள் - மனம். அழுங்குதல் - வருந்துதல். (67)
|