2953.

     வாடலறச் சாகா வரங்கொடுக்கு மென்று மன்றில்
     ஆனந்த நாடகத்துக் அன்புவைத்தேன் ஐயாவே.

உரை:

     ஐயனே, உடம்பு வாடுதலும் சாதலும் இல்லாத வரத்தைக் கொடுக்கு மென்ற கருத்தால், அம்பலத்தில் ஆடுதலையுடைய திருவடியாகிய அழகிய தாமரைக்கண் அன்பு செய்வேனாயினேன். எ.று.

     சாகும் நாளில் உயிர் நின்ற உடம்பு சுருங்கி வாடுத லுண்மையின், “வாடலறச் சாகா வரம் கொடுக்கும்” என்று கூறுகிறார். வாடுதலாவது தோலும் தசையும் சுருங்கிப் பசையின்றிப் புலர்தல். ஆடல் அடி - ஆடுதலையுடைய திருவடி. அழகிய தாமரை போல்வ தென்றற்கு “அடிப்பொன்மலர்” என்று குறிக்கின்றார்.

     (4)