2959.

     எப்படிநின் னுள்ள மிருக்கின்ற தென்னளவில்
     அப்படிநீ செய்கவெனக் கன்புடைய ஐயாவே.

உரை:

     எனக்கு அன்புடைய ஐயனே, என்பால் நின் திருவுள்ளம் எப்படி யிருக்கிறதோ அப்படியே செய்தருள்க; நான் ஒன்றும் சொல்லமாட்டேன். எ.று.

     நான் கேளாதன கேட்பித்தும், காணாதன காட்டியும் அருள் செய்யும் நின் திருவுள்ளத்துக்கு எனக்கு வேண்டுவனவும் வேண்டாதனவும் நன்கு தெரியுமாதலால், “எப்படி நின் உள்ளம் இருக்கின்றது அப்படி நீ செய்க” என வுரைக்கின்றார். நான் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்பது குறிப்பெச்சம். கூறுவது மிகையென்னும் குற்றமாம்.

     (10)