2969.

     பெண்ணொரு பால்வைத்த மத்த னடி - சிறு
          பிள்ளைக் கறிகொண்ட பித்த னடி
     நண்ணி நமக்கரு ளத்த னடி - மிக
          நல்லன டியெல்லாம் வல்ல னடி. கொம்மி

உரை:

     பெண் - உமாதேவி. மத்தன் - உன்மத்தன்போலும் நீரும் எலும்பும் தோலும் அணிபவன். சிறு பிள்ளை - சிறுமையனாகிய சீராளன்; சிறுத்தொண்டருடைய மகன். சிறு பிள்ளையைக் கொன்று சமைத்த கறியை விரும்பினமை பற்றிப் “பித்தன்” என்று பேசுகிறார்கள். அத்தன் - தந்தை. வல்லன் - வல்லவன்.

     (4)