2970.

     அம்பலத் தாடல்செய் ஐய னடி - அன்பர்
          அன்புக் கெளிதரு மெய்ய னடி
     தும்பை முடிக்கணி தூய னடி - சுயஞ்
          சோதிய டிபரஞ் சோதி யடி. கொம்மி

உரை:

     ஆடல் செய் ஐயன் - ஆடுகின்ற தலைவன். எளி தரும் மெய்யன்-எளியனாய் வந்தருளும் மெய்ம்மைப் பண்புடையவன். தும்பை - தும்பை மலர் மாலையைத் தலையிற் சூடிக் கொள்பவன். சுயஞ் சோதி - தன்னியல்பில் அமைந்த சோதி. பரஞ்சோதி - மேலாய சோதி.

     (5)