2972.

     செங்கயற் கண்மட மங்கைநல் லாய் - உன்றன்
          செங்கை பிடித்தவ ராரே டி
     அங்கய லாரன்று பொன்னம்ப லத்தெங்கள்
          ஆனந்தத் தாண்டவ ராஜ னடி.

உரை:

     செங்கயற் கண் - சிவந்த கயல் மீன் போன்ற கண்கள். மட மங்கை - இளம் பெண். அயலார் அன்று - வேற்றுவ ரல்லர், பிடித்தவர் ஆர் என்றது அயன்மைபட ஒலித்தலின், “அயலாரன்று” எனக் கூறுகின்றார்கள்.

     (2)