2973. கன்னற் சுவைமொழி மின்னிடை யாய் - உன்னைக்
கன்னி யழித்தவ ராரே டி
உன்னற் கரியபொன் னம்பலத் தாடல்செய்
உத்தம ரானந்த சித்த ரடி.
உரை: கன்னற் சுவை மொழி மின்னிடையாய் - கரும்பின் சுவை பொருந்திய சொற்களையும் மின்ன்ற் கொடி போன்ற இடையையுமுடைய பெண்ணே. கன்னி - கன்னித் தன்மை; இது கன்னிமை எனவும் வழங்கும். உன்னற் கரிய பொன்னம்பலம் - நினைத்தற் கரிய பொன்னம்பலம். உத்தமர் - உயர்ந்தவர். (3)
|