2974.

     தீமையி லாதபெண் மாமயி லே - உன்னைச்
          சேர்ந்து கலந்தவ ராரே டி
     தாமமு டிக்கணிந் தம்பலத் தேயின்பத்
          தாண்டவஞ் செய்யுஞ் சதுர ரடி.

உரை:

     தீமை - குற்றம். பெண் மயில் - பெண்களில் பெரிய மயில் போன்ற சாயலை யுடையவளே. தாமம் - மாலை. இன்பத் தாண்டவம் - இன்பம் விளைவிக்கும் நடனம்.

     (4)