2975.

     அன்னந டைப்பெண்க ளாரமுதே - உன்னை
          அன்பிற் புணர்ந்தவ ராரே டி
     துன்ன லுடையின ரம்பலத் தேநின்ற
          தூய திருநட ராய ரடி.

உரை:

     அன்ன நடைப் பெண்கள் - அன்னம் போன்ற நடையையுடைய பெண்கள். ஆரமுது - அருமையான அழுதம். துன்னலுடையினர் - தைக்கப்பட்ட உடை; ஈண்டுத் தோலாடை மேற்று.

     (5)