2976.

     காரள கப்பெண் சிகாமணி யே - உன்றன்
          கற்பை யருத்தவ ராரே டி
     பேரள வைக்கடந் தம்பலத் தேநின்ற
          பித்தர் பரானந்த நித்த ரடி

உரை:

     காரளகப் பெண் - கரிய கூந்தலையுடைய பெண். பெண் சிகாமணி - பெண்கட்கு முடிமணி போன்றவள். கற்பு - பெண்மையின் திண்மை நலம். பேரளவு - மாயா மண்டலம். தத்துவங்களால் அளந்து காணப்படுதல் பற்றி, “பேரளவு” எனப்படுகிறது. பரானந்தம் - கருவி கரணங்கட்கு அப்பால் மேலான திருவருள் ஞானத்தால் நுகரப்படும் சிவானந்தம், “பரானந்தம்” என்று சிறப்பிக்கப்படுகிறது.

     (6)