கண

கண்ணிகள்

2979.

     கற்பூர வாசம்வீசும் பொற்பாந்தி ருமுகத்தே
          கனிந்தபுன் னகையாடக் கருணைக்க டைக்கணாட
     அற்பார்பொன் னம்பலத்தே ஆனந்தத் தாண்டவம்
          ஆடிக்கொண் டேயென்னை ஆட்டங்கண் டாருக்கு ( தெண்ட )

உரை:

     கற்பூர வாசம் பொற்பு - கற்பூரத்தின் நறுமணம் கமழும் அழகு. புன்னகை - புன்சிரிப்பு. அற்பார் பொன்னம்பலம் - அன்பு நிறைந்த பொன்னம்பலம்; அன்பரது நிறைந்த அன்பால் பொன் வேயப்பட்டமை பற்றி இவ்வாறு கூறப்படுகிறது. தான் ஆடுவதோடு உயிர் வகைகள் அத்தனையும் ஆடுவது பற்றி, “ஆடிக் கொண்டே என்னை ஆட்டம் கண்டார்” என நங்கை நவில்கின்றாள்.

     (1)